சற்று முன் முதல்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சீனாவில் தோன்றி தற்போது உலக நாடுகளையே ஆட்டி படைத்து வரும் கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவை பொருத்தமட்டில் தொற்று பரவுவதற்கு முன்பே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பரவுதலின் வீரியம் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா தாக்கம் உச்ச நிலையை அடைந்து வருகிறது.அதிலும் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவின் 49 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் கட்சி அமைச்சர்களுக்கும் தொற்று உறுதியாகி வரும் நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.