Actor SV Sekhar: நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
80’ஸ் களில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் திகழ்ந்தவர் எஸ்.வி.சேகர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலில் களம் இறங்கியவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர். அதன் பிறகு அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட பதிவு ஒன்று தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெண் பத்திரிக்கையாளர்கள் மிகவும் கீழ்த்தரமான சித்திரித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க மற்றும் செயலாளர் மிதார் மொய்தீன் அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்து அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் வைத்த பதிவை நான் பகிர்ந்தேன் என தெரிவித்து இருந்தார். மேலும், மன்னிப்பு கேட்டால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த நிலையில் இன்று 02.02.2025) இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.