சென்னைவாசிகள் கவனத்திற்கு..! உற்சாக உத்தரவு.. உயர்நீதிமன்றம் அதிரடி.!

0
142

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் வந்து செல்ல கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு விதித்த தடையை மீறி விழாவிற்கு செல்ல முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி வந்தனர்.

ஆனாலும் மீனவர்கள் மற்றும் சிறிய வியாபாரம் செய்பவர்கள் போன்றோரின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஆகவே, மெரினாவில் பொது மக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் மெரினா கடற்கரையில் வரும் நவம்பர் மாதம் முதல் மக்களை அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது.

மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது.