சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்?

0
140

சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜனவரி 1-ந்தேதி வரையில் 9 நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து இன்று முதல் 23-ந்தேதி வரையில் 6 நாட்கள் புதிதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி நீண்ட நாட்கள் விடுமுறை விட்டால் மாணவர்கள் கலைந்து சென்று விடுவார்கள் என்கிற நோக்கத்தோடு தொடர் விடுமுறையை பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் நீடிப்பதையொட்டி பலகலைக்கழக வளாகம் மற்றும் மெயின் வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.