மீன் மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க தடை விதித்த மாவட்ட ஆட்சியர் – மக்கள் ஆவேசம்

0
119

மீன் மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க தடை விதித்த மாவட்ட ஆட்சியர் – மக்கள் ஆவேசம்

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இது வரை 3550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2255 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகச் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் மூலம் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதனையடுத்து மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேரூந்தகத்தில் இயங்கி வரும் மீன் விற்பனை கடைகளை 09.05.2020 அன்றும், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை 10.05.2020 அன்றும் திறக்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியரான வினய் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிப்பது எந்த விதத்தில் சரி என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 9.5.2020 அன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மொத்த மீன் விற்பனை செய்யும் கடைகளும், 10.5.2020 அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடைகள், இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.