ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் – மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

0
117

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை சரியாக கணக்கெடுப்பதில்லை என்று மதுரையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தியை கொண்ட அமர்வு விசாரித்து உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு என்று 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேவையான சட்ட திட்டங்கள் பிறப்பித்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது நீதிமன்றம்.

அதைத்தொடர்ந்து, ஒபிசி பிரிவினரை கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தானே இட ஒதுக்கீடு தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்க இயலும்? என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன் வைத்துள்ளனர்.

மேலும், நீதிமன்றம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.