ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக போக்குவரத்டுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுதும் இரவு நேர ஊரங்கு அமலுக்கு வந்தது உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலங்களிங்களின் எல்லைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இ-பாஸ் அனுமதியுடன் செல்லலாம் என கூறபடுகிறது.
மேலும் மதுரையில் கொரோனா நோயாளிக்களுக்கு சிகிச்சை அளிக்க 21 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் தயாராக உள்ளது என மதுரை ரயிவே கோட்டம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைநகரான டெல்லியிலும் இதே போல 450 நோயாளிகளிகளுக்கு சிகிச்சை பார்க்கும் அளவில் ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது எனவும் டெல்லி ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது. இது சிறப்பான செயல் எனவும் இது குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன.