Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிப்பறைகளாக மாற்றி வாடகை விட்டு திமுக நிர்வாகி பணம் சம்பாதித்து வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்த செயலை செய்த திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் உட்பட 12 நபர்களின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வைகை நதிக்கரையின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உள்ளே இருக்கும் பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் கோயிலுக்கு வரும் பக்தரக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தனர். இதனை சுற்றிய குறிப்பிட்ட நிலப்பகுதியை அறநிலையத்துறை அதிகாரிகளால் குறைந்த அளவில் வாடகை விடப்பட்டது. கோயில் நிர்வாகம் இந்த வாடகை ஒப்பந்தத்தை 1998 ஆம் ஆண்டு முடித்து வைத்து, புதிய ஆட்களிடம் வாடகைக்கு விட முடிவு செய்தது.

வாடகைக்கு விடப்பட்ட காலங்களில் திமுக நிர்வாகி உட்பட பலர் வாடகையே தராமல் தனது சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிவறைகளை வாடகை விட்டு பணம் வசூலித்துள்ளார். ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு தரவேண்டிய குறைந்தபட்ச வாடகை தொகையை கட்டவே இல்லை என்று கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திமுக நிர்வாகி மட்டும் வாடகைத் தொகை ரூபாய்.22 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும் இவர்கள் அசரவில்லை, காரணம் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டனர். இதனையடுத்து, கல் மண்டபம் கடைகளை காலி செய்யுமாறு மதுரை நீதிமன்றம் உத்தவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள் காலி செய்யப்பட்டு கல்மண்டபம் உட்பட அனைத்து கடைகளும் சீல் வைக்கப்பட்டது.

மேலும், பழமை வாய்ந்த கல் மண்டபத்தை மறு சீரமைத்து மீண்டும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடமாக மாற்ற வேண்டுமென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தர வேண்டிய வாடகை தொகையை நீதிமன்றத்தின் வாயிலாக திமுக நிர்வாகியிடம் வசூலிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகியின் இந்த செயல்பாடு மதுரை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version