உடல் எடையை கிடுகிடுவென குறைக்க உதவும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

0
136
#image_title

உடல் எடையை கிடுகிடுவென குறைக்க உதவும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

நம் உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:-

*துரித உணவு

*அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு

*நிம்மதியற்ற தூக்கம்

*எண்ணெயில் பொரித்த உணவு

*மன அழுத்தம்

*உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை

*அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வழிகள்:-

*தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல்

*வாக்கிங், ஜாகிங் செல்லுதல்

*உடல் உழைப்பு

*எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவை தவிர்த்தல்

*நிம்மதியான உற்றகம்

*பழச்சாறு, நட்ஸ் சாப்பிடுதல்

உடல் எடையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்…

தேவையான பொருட்கள்:-

*தனியா – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*சோம்பு – 1/4 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை..,

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி இடித்த தனியா விதை, 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கொத்தமல்லி, சீரகம் , சோம்பு சேர்த்து ஊறவைத்த தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. இந்த பானத்தை பருகிய அடுத்த 1 மணி நேரத்திற்கு எந்த ஒரு உணவும் உட்கொள்ளக் கூடாது.

அதேபோல் எண்ணையில் பொரித்த வறுத்த உணவுப் பொருட்களை தவிர்த்து நட்ஸ், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடத் தொடங்குங்கள்.

தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவைகளை செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வருவதன் மூலம் உடல் எடை கிடுகிடுவென குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.