Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்!

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்!

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பல வகையான வெப் சீரிஸ் வெளியிடப்பட்டு வருகிறது. திரில்லர் கதைகள் எனத் தொடங்கி பல கோணங்களில் விதவிதமான வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் யில் காணலாம். இவ்வாறு வெளியிடப்படும் வெப் சீரிசை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது அடுத்த கட்ட அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதாவது 2024 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் மகாபாரத கதையை வெப் சீரிஸ் ஆக வழங்க உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நமது புராணங்களில் முக்கியமான ஒன்று மகாபாரதம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியது தான் இந்த மகாபாரதம்.

இந்த மகாபாரத கதையை பார்ப்பதற்கென்று ஓர் வித ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு இது பெரும் விருந்தாக இருக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் புதிய டெக்னாலஜி பொலிவுடன் மகாபாரத கதையை நாம் காணலாம். அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

Exit mobile version