பெண்களுக்கான “மகாலட்சுமி திட்டம்”.. இன்று அமலுக்கு வந்தது!!
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மொத்தம் 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி முதன் முதலில் ஆட்சியை பிடித்து அசத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிவி ஏற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பேருந்துகளில் பயணிக்க கட்டணம் இல்லா சேவையை முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த கட்டணம் இல்லா சேவைக்கு “மகாலட்சுமி திட்டம்” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள், திருநங்கைகள் தெலுங்கானா மாநிலத்தின் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். தற்பொழுது இந்த மகாலட்சுமி திட்டத்திற்கு பெண்கள், திருநங்கைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.