அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் சமீபகாலமாக ஓரளவு அதன் பாதிப்பானது குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன.ஆனால் திடீரென மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் சில கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 5,000 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அம்மாநில எல்லையில் அமைந்துள்ள பாக்பத் மாவட்டத்தில் இரவு முதல் இந்த ஊரடங்கு உத்தரவானது அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது“ மேற்கூறிய வகையில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட எந்த இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக அவசரகால சூழ்நிலைகளைத் தவிர மற்ற எந்த காரணங்களுக்காகவும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் அல்லது வாகனங்களின் எந்த இயக்கமும் இந்த பகுதிகளில் அனுமதிக்கப்படாது.
மேலும் இந்த இடங்களில் சமூகக் கூட்டங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எந்தவொரு சமூகக் கூட்டங்களும், முன் அனுமதி பெற்ற பிறகே நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது திடீரென மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் தான் மகாராஷ்டிர அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தான் அம்மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் பகுதி நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறே கேரளா மாநிலத்திலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.