காலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் – அரசு அறிவிப்பு
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது.
இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த மாநில அரசுகள், மதுபானக்கடைகளையுல் சில கட்டு பாட்டுகளுடன் திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் 45 நாளுக்கு மேல் மது பார்க்காத மது பிரியர்கள், அலை அலையாக மதுக்கடையை மொய்ததன் விளைவு, சில மாநிலங்களில் மதுக்களின் விலைகள் ஏறப்பட்டன, சில மாநிலங்கள் மதுக்கடைகளை அரசே மூடியது, சில மாநிலங்களில் மதுக்கடைகளை மூடே நீதிமன்றமே உத்தரவிட்டது.
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த காலகட்டத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் விற்க மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளன.
மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மதுபானம் தொடர்பாக பெரும் கூட்டத்தை தவிர்க்கும் அனைத்து கடைகளையும் மூடி விட்டது. இந்நிலையில் தற்போது ஆன்லைனில் ஆர்டர்கள் பெறப்பட்டு வீட்டிற்கே சென்று மதுபானம் வழங்க (Door Delivery) அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்று (மே 15 ஆம் தேதி) காலை 10 மணி முதல் வீட்டிற்கே சென்று மதுபானம் விநியோகம் தொடங்கும் என்று மாநில அரசு தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி, மதுக்கடைகள் 10 பேருக்கு மேல் ஊழியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது, வீட்டு விநியோகம் மேற்கொள்பவர் ஒரு சமயத்தில் 24 பாட்டில்களுக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.