Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையிலான ஆட்சி அமையும் என நேற்று முன் தினம் இரவு வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று அதிகாலை பாஜக ஆட்சி அமைந்ததை அங்குள்ள அரசியல் வல்லுனர்களாலே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இரவோடு இரவாக அமித்ஷா செய்த மேஜிக் காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டு தற்போது அங்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க மகாராஷ்டிர மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தது சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் நேற்றிரவு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக நள்ளிரவே விசாரணை செய்ய வேண்டும் என்றும் இக்கட்சிகள் கோரிக்கை விடுத்தது ஆனால் இன்று காலை 11 30 மணிக்கு இந்த வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இன்றைய விசாரணையின்போது முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசை உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க கோர்ட் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடந்தால் பாஜக தலைமையிலான ஆட்சி தப்புமா? மீண்டும் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? அரசியல் குழப்ப நிலை தொடருமா? என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version