Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

#image_title

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வள்ளல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் ஆசை ராசாவே, வீரம் விளைஞ்ச மண்ணு, நெஞ்சினிலே, சுயம்வரம், லூட்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்த இவர். இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவர்களை கைது திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டும் 2009ம் ஆண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா அவர்கள் தோல்வியை தழுவினார். பின்னர் 2014ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மீண்டும் தேர்தலில் பேட்டியிட்ட நடிகை ரோஜா அவர்கள் வெற்றி பெற்றார். பின்னர் 2015ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொண்ட நடிகை ரோஜா அவர்கள் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் முழுநேர அரசியல் வாதியாக மாறிய ரோஜா அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சரும் நடிகையுமான ரோஜா அவர்கள் “இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் அவர்கள் பாகுபலி, ஆதிபுருஷ் போன்ற புராண திரைப்படங்களில் நடித்து இன்றைய தலைமுறை ஹீரோக்களில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். ஒரு நடிகையாக இதை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து மகேஷ் பாபு அவர்களுடன் நடிப்பதை பற்றி அமைச்சரும் நடிகையுமான ரோஜா அவர்கள் “பிரபல நடிகராக உள்ள மகேஷ் பாபு அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுவும் அவருக்கு அக்கா அல்லது அண்ணி இரண்டு கதாப்பாத்திரத்தில் எதாவது ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது” என்று கூறினார்.

Exit mobile version