சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

0
95
#image_title
சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!!
சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை அதாவது அக்டோபர் 8ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் வரையில் இடையில் தண்டவாள பராமரிப்பு பணி தலை நடைபெறவுள்ளது. அதனால் இன்று(அக்டோபர்7) இரவு 11.30 மணிமுதல் நாளை(அக்டோபர்8) காலை 6.30 மணி வரை 14 மின்சார ரயில்களின் சேவையை இரத்து செய்யவுள்ளோம் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் இரயில் நிலையத்துக்கு இன்று(அக்டோபர்7) இரவு 10.35 மணிக்கு புறப்படும் இரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி ரயில் நிலையத்துக்கு இன்று(அக்டோபர்7) இரவு 11.30,11.45 மணிக்கு புறப்படும் இரயில், பட்டாபிராம் மிலிட்டரி சூட்டிங்கில் இருந்து ஆவடிக்கு இன்று(அக்டோபர்7) இரவு புறப்படும் இரயில் ஆகியவை இரத்து செய்யப்படவுள்ளது.
மேலும் மூர்மார்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு நாளை(அக்டோபர்8) காலை 4.15 மணிக்கு செல்லும் இரயிலும், மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை(அக்டோபர்8) காலை 4.30 மணிக்கு திருவள்ளூருக்கு செல்லும் இரயிலும், மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை(அக்டோபர்8) காலை 5.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் இரவிலும்,  மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை(அக்டோபர்8) காலை 5.40 மணிக்கு திருவள்ளூருக்கு செல்லும் மற்றொரு இரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய வழித்தடத்தில் கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் நாளை காலை(அக்டோபர்8) 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை முதல் தாம்பரம் வரையிலான மின்சார இரயில் சேவை நாளை(அக்டோபர்8) காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இரத்து செய்யப்படுகின்றது. தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மின்சார  இரயில் சேவை நாளை(அக்டோபர்8) காலை 10.05 மணிமுதல் மதியம் 3.30 மணி வரை இரத்து செய்யப்படுகிறது. அதே போல செங்கல்பட்டு முதல் கடற்கரை வரையிலான மின்சார இரயில் சேவை நாளை(அக்டோபர்8) காலை 9.40 மணிமுதல் மதியம் 1 மணி வரை இரத்து செய்யப்படுகிறது.
பயணிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் நாளை காலை 11 மணிக்கும், காலை 11.50 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கும், 12.50 மணிக்கும், 1 மணிக்கும், 1.45 மணிக்கும், 2.15 மணிக்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளது.
மேலும் அதே வழியில் அதாவது செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் நாளை(அக்டோபர்8) காலை 9.40 மணிக்கும், 10.20 மணிக்கும், 10.55 மணிக்கும், 11.50 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், 12.20 மணிக்கும், 1 மணிக்கும் சிறப்பு மின்சார இரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.