அதிமுக வில் சசிகலா ஓபிஎஸ் இணைவது குறித்து எடப்பாடி எடுத்த முக்கிய முடிவு.. லீக்கான சீக்கிரெட்!! டோட்டல் அப்செட்டில் திமுக!!
நாளை அதாவது ஆகஸ்ட் 16ம் தேதி அதிமுக கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்னென்ன பேசப்போகிறார் என்பதை குறித்து பரவி வரும் தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
அதிமுக கட்சி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் உடனே அதை ரத்து செய்து விட்டு அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தது. இதனால் அதிமுக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர். அதாவது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட செய்தி அதிருப்தியை தந்தது.
இதற்கு மத்தியில் நாளை அதாவது ஆகஸ்ட் 16ம் தேதி அதிமுக கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசனை செய்யப்படவுள்ளது என்பது குறித்து பல எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்னென்ன பேசப்போகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.
* அதிமுக கட்சி தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதையடுத்து தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்ற முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வருவது குறித்து பேசப்படலாம்.
* நாளை(ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ள அதிமுக கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தற்பொழுது அதிமுக கட்சியில் இருக்கும் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஓஎஸ் மணியன், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர்களிடம் கட்சியை ஒருங்கிணைத்தால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பது குறித்து பேசுமாறு வலியுறுத்தியுள்ளாராம். அதனால் அந்த மாஜி அமைச்சர்கள் கட்சியை ஒன்றிணைப்பது குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
* திமுக கூட்டணியை வலுவிலக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக கட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகின்றது.
* நாளை(ஆகஸ்ட்16) நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுப்பார்கள் என்று தெரிகின்றது. நாளை என்னதான் நடக்கும் என்பதை பொறுத்திருத்து பார்க்கலாம்.