Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த கீரையில் கசாயம் செய்து குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்!! ஒரே ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

இன்றைய வளர்ந்து வரும் காலத்தில் ஆர்கனிக் உணவுகள் பற்றிய புரிதல் இப்பொழுது தான் மக்களுக்கு வரத் தொடங்குகிறது.கீரையை விரும்பத்தவர்கள் கூட தற்பொழுது அதன் மகிமை தெரிந்து தினசரி உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

கீரை இனங்களில் மிக நீளமான தண்டுடன் வளரும் தண்டுக் கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக அல்லது சூப்,குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தண்டுக் கீரையில் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.தண்டு கீரையில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் எலும்பு சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் அதை தினமும் உட்கொள்ள வேண்டும்.

வலுவிழந்த நரம்புகளை வலிமையாக்க தண்டுக் கீரையில் கசாயம் செய்து பருகி வரலாம்.முருங்கை கீரையை போன்றே தண்டுக் கீரையும் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த தண்டுக் கீரையில் அருமையான சூப் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தண்டுக் கீரை இலை – சிறிதளவு
2)தண்டுக் கீரையின் தண்டு – சிறிதளவு
3)சீரகத் தூள் – 5 கிராம்
4)நொச்சி இலை பொடி – 3 கிராம்
5)வாதமடக்கி பொடி – 3 கிராம்

செய்முறை விளக்கம்:-

*சிறிதளவு தண்டுக் கீரையின் இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு தண்டுக் கீரையின் தண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

*அடுத்து ஐந்து கிராம் சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு நாட்டு மருந்து கடையில் நொச்சி இலை பொடி,வாதமடக்கி பொடியை வாங்கிக் கொள்ள வேண்டும்.

*பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் தண்டுக் கீரை இலை மற்றும் தண்டு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

*அடுத்து சீரகத் தூள்,நொச்சி இலைப் பொடி,வாதமடக்கி பொடியை கொட்டி கொதிக்க வைத்து வடிகட்டி பருக வேண்டும்.விருப்பப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

Exit mobile version