வயது முதுமை காலத்தில் ஆண்கள் சந்திக்க கூடிய ஒரு பெரும் பிரச்சனை விறைப்புத் தன்மை.ஆனால் தற்போதைய காலத்தில் இளம் தலைமுறையினர் இந்த விறைப்புத் தன்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்பட்டால் குறைந்தது 90 நாட்களுக்கு உங்களது பாலியல் வாழ்க்கை பாதிக்கக்கூடும்.உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளாலும் இது ஏற்படுகிறது.இதனால் தாம்பத்திய வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடுகிறது.
ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிடில் விறைப்புத் தன்மை பிரச்சனை ஏற்படும்.புகைப்பிடித்தல்,மது அருந்துதல் போன்ற காரணங்களும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.எனவே ஆண்குறி விறைப்புத் தன்மை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி கொள்ளு கஞ்சி செய்து குடிங்கள்.
தேவையான பொருட்கள்:-
*கொள்ளு பருப்பு – 25 கிராம்
*மிளகு – 5
*பூண்டு – 2 பற்கள்
*சீரகம் – 5 கிராம்
*உப்பு – தேவைக்கேற்ப
*தண்ணீர் – அரை கப்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிண்ணத்தில் 25 கிராம் கொள்ளு பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு கொள்ளு பருப்பை குக்கரில் போடவும்.அடுத்து இரண்டு பல் பூண்டை தோல்நீக்கம் செய்து கொள்ளு பருப்பில் சேர்க்கவும்.
அடுத்து ஐந்து கருப்பு மிளகை தட்டி சேர்க்கவும்.பிறகு 5 கிராம் சீரகம் மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
அதன் பிறகு குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.விசில் நின்றதும் மத்து கொண்டு கொள்ளு பருப்பை மசித்து கிண்ணத்திற்கு மாற்றி சாப்பிட வேண்டும்.இந்த கொள்ளு கஞ்சி ஆண்மை விருத்திக்கு பெரிதும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)வேர்க்கடலை – ஒரு கப்
2)வெல்லம் – கால் கப்
3)உப்பு – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் வேர்க்கடலை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போடவும்.இதனுடன் கால் கப் வெல்லம் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும்.
இந்த வேர்க்கடலை வெண்ணையை ஒரு டப்பாவில் சேகரித்துவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.