உங்களில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி, ஆபத்தான டயட்டை பின்பற்றி வருவீர்கள். உடல் எடையை குறிக்க நினைப்பவர்கள் சாதத்தை தவிர்த்து விட்டு சப்பாத்தி உட்கொள்ள விரும்புகின்றனர். சிலர் சில நாட்களுக்கு மட்டும் சப்பாத்தியை எடுத்துக் கொள்கிறார்கள். சில சப்பாத்தியில் நெய், வெண்ணெய் சேர்த்து சாப்பிடுகிறார்கள். சிலர் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை குறையுமா? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில்.
சப்பாத்தியானது மைதா, கோதுமை மாவில் தயார் செய்து செய்யப்படும் ஒரு உணவுப் பொருளாகும். அதிகளவு மைதா கோதுமையை உட்கொண்டால் அது உடல் பருமன்,மாரடைப்பு,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.
உடல் எடையை குறைக்க விரும்பினால் கார்போஹைட்ரேட்,சர்க்கரை போன்றவறை இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோதுமையுடன் ராகி,சோளம் போன்ற மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை உட்கொண்டால் உடல் எடை குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்படும்.
ராகி, கம்பு, சோளம் போன்ற சிறு தானிய மாவை கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இந்த சிறு தானியங்களில் மிகவும் குறைவான கலோரி இருப்பதால் பசியை கட்டுப்படுத்துவதோடு இதை உட்கொள்ளும் போது உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.