Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய் பாதிப்புகள் உடலை அண்டாமல் இருக்க.. தினம் ஒரு கப் இந்த கஞ்சி செய்து குடிங்க!!

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஏழைகளின் உணவாக சிறுதானியங்கள் கருதப்பட்டது.தற்பொழுது அரிசி,கோதுமை போன்றவற்றின் பயன்பட்டால் சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.

இந்த சிறுதானியத்தின் அருமையை அறிந்தவர்கள் தினமும் ஒருவேளையாவது கஞ்சி,கூழ் என்று எடுத்துக் கொள்கின்றனர்.

சிறுதானியங்களின் பயன்கள்:

**உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

**உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.உடலில் வாதம்,பித்தம்,கபம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.

**சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.காய்ச்சல்,மூட்டுவலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.

சிறுதானிய கஞ்சி தயாரிக்கும் முறை:

தேவைப்படும் பொருட்கள்:

1.சாமை – 50 கிராம்
2.வரகரிசி – 50 கிராம்
3.குதிரை வாலி – 50 கிராம்
4.சீரகம் – ஒரு தேக்கரண்டி
5.பூண்டு பற்கள் – எட்டு
6.சின்ன வெங்காயம் – நான்கு
7.உப்பு – தேவையான அளவு
8தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

ஸ்டெப் 01:

முதலில் சாமை,வரகரிசி மற்றும் குதிரை வாலி ஆகிய ஒவ்வொன்றையும் தலா 50 கிராம் அளவிற்கு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து நான்கு சின்ன வெங்காயம் மற்றும் எட்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் விருப்பப்பட்டால் கால் தேக்கரண்டி கருப்பு மிளகு எடுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அதன் பின்னர் அடுப்பில் குக்கர் வைத்து ஊறவைத்த சிறு தானியங்களை போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

பிறகு இடித்த சீரக மிளகு கலவையை அதில் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 06:

அடுத்து தங்களுக்கு தேவையப்பட்டால் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும்.

ஸ்டெப் 07:

மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு விசில் நின்றதும் சிறுதானிய கஞ்சியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மல்லி தழை தூவி சாப்பிடலாம்.

Exit mobile version