Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை!

Make policies without affecting all of this! Chief Minister's advice!

Make policies without affecting all of this! Chief Minister's advice!

இவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை!

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு. க.  ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது பற்றியும், நிலையான சுரங்க கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்கு முறைப் படுத்த புதிய கொள்கைகளை கனிம வருவாயை அதிகரிக்கவும், என எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும் பயன்பாட்டில் இல்லாத வழிகளை கண்டறிந்து வாய்ப்புகள் உள்ள இடங்களில் அந்த குவாரிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக ஆக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனில்லாத  அந்த குவாரிகளை மறுசீரமைப்பு செய்யவும், பாதுகாப்புகளை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் இரண்டு கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர் படிமங்கள் ஆகியவற்றை பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் பெயர் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆலோசித்தார். புவியியல் மற்றும் சுங்கத் துறையின் மூலம் குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குத்தகை உரிமம் மற்றும் நடை சீட்டு வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையைப் பயன்படுத்தவும், விரைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு கனிம நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளின் மூலம் ரூபாய் 250 கோடி அளவுக்கு வருவாயை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைடில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு புதிய தொழில்நுட்ப முறை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்யவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலை தயாரிக்க புதிய உற்பத்திக் திட்டங்ளைத் தொடங்கும் செயல் திட்டங்களை உருவாக்கவும், முதல் அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பணிகளை அடுத்த 3 வருடத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகர்களை நியமித்து உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர் அறிவுரை கூறினார். மேலும் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Exit mobile version