தீபாவளி அன்று இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள்!! வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் இருக்கும்!!
நம் இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த தீபாவளி தினத்தில் அனைவரது வீடுகளிலும் மைசூர் பாக்கு, பூந்தி, லட்டு, குலோப்ஜாமூன் உள்ளிட்ட இனிப்பு மற்றும் முறுக்கு, மிக்ச்சர் உள்ளிட்ட கார பண்டங்களை செய்து சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டங்களில் ஒன்றான ஜாங்கிரி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*வெள்ளை உளுந்து
*அரிசி மாவு
*கார்ன் பிளார்
*புட் கலர் (சிவப்பு)
*சர்க்கரை – 3/4 கிலோ
*பால் – 1/2 கப்
*ரோஸ் எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி
*எண்ணெய் – ஜாங்கிரி பொரிக்க தேவையான அளவு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் 150 கிராம் வெள்ளை உளுந்து போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 45 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின்னர் ஒரு கிரைண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் உளுந்து மாவு பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 50 கிராம் அரிசி மாவு மற்றும் 150 கிராம் கார்ன் பிளார் மாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அடுத்து சிவப்பு நிற புட் கலர் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3/4 கிலோ சர்க்கரை சிறிதளவு தண்ணீர் மற்றும் 1/2 கப் பால் ஊற்றி பாகு பதம் வருவதற்கு முன் காய்ச்சி இறக்கவும். அதில் 1/4 தேக்கரண்டி அளவு ரோஸ் எசன்ஸ் ஊற்றிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் ஒரு ஓட்டை போட்ட ஈரக் காட்டன் துணியில் தயார் செய்து வைத்துள்ள உளுந்து மாவை சேர்த்து எண்ணெயில் ஜாங்கிரி போல் பிழிந்து கொள்ளவும்.
ஜாங்கிரி இருபுறமும் வெந்து வந்ததும் அவற்றை எடுத்து தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் ஜாங்கிரி கடைகளில் கிடைக்கும் டேஸ்டில் இருக்கும். வரவுள்ள தீபவளிக்கு இந்த ஜாங்கிரி ஸ்வீட் செய்து அனைவரையும் அசத்துங்கள்.