உடலில் உள்ள பல வியாதிகளுக்கு இஞ்சி,கிராம்பு மருந்தாக பயன்படுகிறது.செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு வீக்கம்,உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சி மற்றும் கிராம்பில் தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம்.
அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயராமல் இருக்க இஞ்சி கிராம்பு பானம் பெரிதும் உதவுகிறது.சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தும் இஞ்சி கிராம்பு பானம்:
தேவையான பொருட்கள்:
1)கிராம்பு
2)இஞ்சி
செய்முறை விளக்கம்:
ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.பிறகு அதில் இடித்த இஞ்சி சேர்க்கவும்.
அடுத்ததாக இரண்டு கிராம்பு சேர்த்து மிதமான தீயில் பானத்தை கொதிக்க விடுங்கள்.இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
தயாரித்த பானத்தை சிறிது நேரம் ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.இதில் தேன் போன்ற எந்தஒரு இனிப்பும் சேர்க்காமல் அப்படியே குடியுங்கள்.
தினமும் இந்த இஞ்சி கிராம்பு பானத்தை குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.