உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி?
எலும்பை பல மடங்கு வலிமையாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு சத்து உருண்டை சாப்பிட்டு வாருங்கள்.
ராகி சத்து உருண்டை மற்றும் உளுந்து சத்து உருண்டை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)ராகி பொடி – 1 கப்
2)கருப்பு எள் – 1/4 கப்
3)வேர்க்கடலை – 1 கப்
4)வெல்லம் – தேவையான அளவு
செய்முறை…
ஒரு கப் ராகி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிறகு அடுப்பில் தோசை தவா வைத்து அதில் ராகி மாவை அடை போல் தட்டி சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இந்த ராகி அடையை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
அடுத்து 1 கப் வேர்க்கடலையை மற்றும் கருப்பு எள்ளை மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ராகி துண்டுகள் சேர்த்து ஒரு சுத்து விடவும். பிறகு வறுத்த வேர்க்கடலை, எள் மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து பொடித்துக் கொள்ளவும்.
இதை ஒரு தட்டிற்கு மாற்றி கையில் நெய் தடவிக் கொண்டு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
இந்த உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் எலும்பு அதிக வலிமைபெறும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – 1/4 கப்
2)கருப்பு உளுந்து – 1 கப்
3)வெல்லம் – தேவையான அளவு
4)ஏலக்காய் – 2
5)பாதாம் – 1/2 கப்
6)வேர்க்கடலை – 1 கப்
செய்முறை….
அடுப்பில் வாணலி வைத்து வெந்தயம் மற்றும் கருப்பு உளுந்தை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வேர்க்கடலையை வறுத்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
இதனுடன் ஏலக்காய், பாதாம், வெல்லம் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றி கையில் நெய் தடவிக் கொண்டு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
இந்த உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் எலும்பு அதிக வலிமைபெறும்.