Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பூசி போட்டுக் கொண்ட முகங்கள்! சமூக வலைத்தளத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்.

மாளவிகா மோகனன் இந்தியில் யுத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்சமயம் திரைப்பட குழுவினருடன் மாளவிகா தன்னுடைய முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற நோய் தடுப்பு மையத்தில் நேற்று மதியம் 12 30 மணியளவில் அவர் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்கிறார். அவருடன் நடிகர்கள் பார்கான் மற்றும் ரித்தேஷ் சித்வானி மற்றும் சித்தார்த் சதுர்வேதி உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், தடுப்பு ஊசி போட்டு கொன்ற மகன்கள் என்று அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மாளவிகா மோகனன் தமிழ் மொழியில் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version