Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல தமிழ் நடிகரை காதலிக்கும் மலையாள நடிகை! இணையத்தில் வைரலான பிறந்தநாள் புகைப்படங்கள்!

பிரபல தமிழ் நடிகரை காதலிக்கும் மலையாள நடிகை! இணையத்தில் வைரலான பிறந்தநாள் புகைப்படங்கள்!  

பிரபல மலையாள நடிகை விமலா ராமன் தமிழ் நடிகர் ஒருவரை காதலிப்பதாக புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழில் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் நடித்திருப்பவர் தான் நடிகை விமலா ராமன். இவர் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை.

தமிழில் உன்னாலே உன்னாலே, என்ற படத்தில் அறிமுகம் ஆகி என்றென்றும் புன்னகை, ஒன்பதுல குரு, அரண்மனை 1 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தான் நடிகர் வினய். இவர் தற்போது டாக்டர் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

தற்போது வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வரும் வினய், நடிகை விமலா ராமனை காதலிப்பதாக கடந்த சில வருடங்களாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் விமலா ராமன் தனது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கேப்ஷனாக 23.1.23 இந்த தினத்தில் என்னுடைய பிறந்தநாள் வருவதை அடுத்து இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் எனக்கூறி மை ஃபேமிலி( My family) என பகிர்ந்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியதாக கூறி வினயுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு குடும்பத்தில் ஒருவராக வினயையும் ஏற்றுக் கொண்டதால் அவரின் காதலை விமலா ராமன் ஏற்றுக் கொண்டதாக உறுதியாகியுள்ளது.

வினய் மற்றும் விமலா ராமன் ஆகிய இருவரும் டேம் 999 என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version