Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

அனைத்து துறையினருக்கும் தேர்வு வைப்பதன் காரணம் எவ்வளவு பேர் முயற்சித்தாலும், அதற்கு தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அதாவது திறமை உள்ளோருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் வரவர பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்வது சகஜமாகி விட்டது.

சில அரசு ஊழியர்கள் தன் சொந்த தேவைக்களுக்காக சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வில் கூட அவ்வளவு சோதனைகளை மீறி சிலர், பணம் படைத்தவர்கள், ஆள் மாறாட்டம் செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அது போல் தற்போது, பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அதற்கு தொடர்புடைய முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. அதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டும் வெளிவராமல் இருந்தது.

தற்போது அந்த முடிவுகள் சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படம் இருக்கும் இடத்தில் அவரது புகைபடத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பட்ட மக்கள் குற்றம்சாட்டத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து பிகாரின் ஆளும் கட்சியான ஜனதா தள கட்சியின் தலைவர் குலாம் காஸ் கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான மதிப்பெண் பட்டியலை வெளியிடும் போது இதுபோல் சிறு தவறுகள் நடந்துவிடுகின்றன. தவறுகள் மிக விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்  என்றும் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், பீகாரில் எந்த நியமனங்களும் மோசடி வேலை யில்லாமல் நிரப்பப்படுவதில்லை  என எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர்,  தேஜஸ்வி யாதவ் அவரின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். பீகாரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல என்றும் பல குரல்கள் எழுந்து வருகின்றன.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியலிலும்,இதே போல்  இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.அதை பற்றி கேட்கும் பொது இதுபோலவே தவறுதலாக இடம்பெற்றது என கூறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version