Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவர்ச்சி உடையில் மலையாளக் குருவி கீர்த்தி சுரேஷ்!!

Malayalam Sparrow Keerthi Suresh In Sexy Attire !!

Malayalam Sparrow Keerthi Suresh In Sexy Attire !!

கவர்ச்சி உடையில் மலையாளக் குருவி கீர்த்தி சுரேஷ்!!

மலையாளத்தில் தயாரிப்பாளரான நடிகர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் இரண்டாவது மகள்தான் கீர்த்தி சுரேஷ்.இவர் தன் அப்பாவிற்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.அதன்பிறகு நடிகைக் கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” என்ற திரைப்படம் தான் வேற லெவல் கீர்த்தி சுரேஷை மிகவும் உயரத்திற்கு கொண்டு வந்தது.

அதன் பிறகு மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரெமோ” என்ற திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார் கீர்த்தி சுரேஷ் அதன்பின் விஜய்,விஷால் சூர்யா,தனுஷ் மற்றும் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.

கடந்த வருடத்தில் கூட “நடிகையர் திலகம்” என்ற திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கினார்.இவர் ரஜினி நடிக்கும் “அண்ணாத்த” என்ற திரைப் படத்தில் இப்போது நடித்துக்கொண்டு வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக சினிமா துறை கூறியுள்ளார்கள்.தற்பொழுது கருப்பு நிற கவர்ச்சிக்கரமான புடவையைக்கட்டிக் கொண்டு எடுத்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப “ஓப்பனா”(opena) இருக்கீங்க என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Exit mobile version