பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!

0
105

நேற்றைய தினம்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த நாட்டின் பிரதமரை அரை மணி நேரமாக காக்க வைத்து கூட்டத்தை புறக்கணித்தது இதுதான் முதல் முறை என்று ஊடகங்கள் மம்தா பானர்ஜி தொடர்பாக கூறி வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகளை நேற்று நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் சென்ற சமயத்தில் அவரை வரவேற்பதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வருகை தரவில்லை. ஆளுநர் ஜக்திப் தங்கர் மட்டுமே வருகை தந்திருந்தார்.

விமானம் மூலமாக புயல் பாதித்த இடங்களை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஆய்வு செய்தார். அதன் பிறகு மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் ,அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபெறும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டார் .

இதன் காரணமாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோபமடைந்து கூட்டத்தை புரக்கணித்ததாக சொல்லப்படுகிறது.இதனால் முதல்வர் இல்லாமலேயே ஆலோசனை கூட்டம் நடந்ததாக தெரிகிறது.புயல் சேதங்களை பார்வையிட திகா பகுதிக்கு செல்ல வேண்டி இருந்ததால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.