Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் மம்முட்டி வெளியிட்ட பரபரப்பு தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு நோய்த்தொற்று உண்டாகியிருக்கிறது நோய்த்தொற்றின் 3வது அலை இந்தியாவில் கடந்த இரண்டு வார காலமாக மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

அவர் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்ட போதும் எனக்கு நோய்தொற்று பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது, லேசான காய்ச்சல் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

நான் நன்றாகவே இருக்கின்றேன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து சமயங்களிலும் முகக் கவசம் அணியுங்கள், கவனமாக இருங்கள், என்று கூறியிருக்கிறார் நடிகர் மம்மூட்டி.

Exit mobile version