Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“மம்தா பேனர்ஜி” Weds “சோசியலிசம்” வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

பி மம்தா பானர்ஜி மற்றும் ஏ எம் சோசியலிசம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் பார்க்கும் மக்களுக்கு இந்த பத்திரிக்கை அழைப்பிதழ் உண்மையானதா எழுத்தப்பட்டுள்ளதா என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

மேலும் என்னவென்றால் அந்தத் திருமணப் பத்திரிக்கையில் மணமகனின் மூத்த சகோதரர் பெயர் ஏ எம் கம்யூனிசம் மற்றொறு சகோதரரின் பெயர் ஏ எம் லெனினிசம் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பத்திரிக்கை உண்மையானது என்று குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் என்று பிரபலமாக அறியப்பட்ட லெனின் மோகன் என்ப என்பவரின் மகன் திருமண அழைப்பிதழ் தான் இது. இவர் சேலத்தில் உள்ள பனமரத்துப்பட்டி நகரத்தின் கவுன்சிலராக உள்ளார்.

மோகன் எப்படி தனது மகனுக்கு இந்தப் பெயரை வைத்தார் என்பது பற்றி அவர் எடுத்துச் சொல்கிறார், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்தது என்றும், சித்தாந்தம் உலகில் எங்கும் செல்லாது என்றும் மக்கள் கூறினார்கள். அப்பொழுது இது தொடர்பாக தூர்தர்ஷனில் ஒரு செய்தி வந்தது, அந்த நேரத்தில் என் மனைவி என் மூத்த மகனைப் பெற்றெடுத்தார். மனித இனம் இருக்கும் வரை கம்யூனிசம் வீழ்ச்சி அடையாது என்று நான் நம்பியதால் உடனடியாக என் மூத்த மகனுக்கு கம்யூனிசம் என்று பெயரிட முடிவு செய்தேன் என்று அவர் கூறினார்.

கட்டூர் கிராமத்தில் கம்யூனிசத்தை பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவதாக அவர் கூறினார். எனது மூன்று மகன்களுக்கும் ஒரே மாதிரியாக பெயரிட வேண்டும் என்று விரும்பினேன். அதேபோல் மணமகளும் எங்கள் உறவுக்காரர். மணமகளின் தாத்தா ஒரு காங்கிரஸ்காரர். அதனால் மம்தா பானர்ஜியின் செயல்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே அவர் தனது பேத்திக்கு மம்தா பானர்ஜியின் பெயரிட விரும்பினார். நமது சந்ததியினர் சித்தாந்தத்தை நோக்கி முன்செல்ல வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். அதேபோல் எனது பேரனுக்கு மார்க்சியம் என்று பெயரிட்டுள்ளேன். எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் நாங்கள் அவளுக்கு கியூப மதம் என்று பெயர் இடுவேன் என்று மோகன் கூறியுள்ளார்.

இந்த அழைப்பிதழ் திங்களன்று பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டதில் இருந்து கடந்த 3 நாட்களாக எனக்கு 300க்கும் மேற்பட்ட போன்கால்கள் வந்துள்ளன. அதுவும் எப்படி மணமகன் மற்றும் மணமகள் பெயர்களை மிகவும் ஆர்வமாக கேட்டு மகிழ்ந்தனர். இந்த அழைப்பிதழ் நிஜமாகவே உண்மை தன்மை உடையதா என்று சரிபார்க்க பல நண்பர்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. பலரும் ஒரே கேள்வியை கேட்டதனால் சற்று எரிச்சலாகவும் இருந்தது. பின்னர் நான் அதை பயன்படுத்திக் கொண்டேன் என அவர் கூறினார்.

திருமணத்தின் பொழுது இந்த திடீர் சலசலப்புக்கு குடும்பத்தினர் எவ்வாறு அதை சகித்துக் கொண்டார்கள் என்று கேட்ட பொழுது, அவர்களின் பெயர்கள் இவ்வளவு உற்சாகத்தை கொடுத்ததில் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று கூறினார்.

அதேபோல் என் மகன்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அத்தகைய பெயர்களை வைத்து இருப்பதால் அனைவரும் பாராட்டுகிறார்கள். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் நிறைய இந்த பெயரினால் அவமானத்தை எதிர்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பெயர்களை தவறாக எழுதி கூட இருக்கிறார்கள். ஆனால் கல்லூரி சென்ற பின் அந்த நிலைமை கொஞ்சம் மாற்றம் அடைந்தது. நாங்கள் பல தலைமுறைகளாக இந்த பெயர் பின்பற்றி வருவதால் மக்கள் பின்னணியை கேட்பார்கள் மற்றும் கவரப்படுவார்கள் என்று நம்புகிறேன். எனக் கூறினார்.

Exit mobile version