Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்றாவது முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி!

சமீபத்தில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி அடைந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.அதே போல புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் கம்யுனிஸ்ட் கட்சியே மீண்டும்.ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது.

அந்த வரிசையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார். அவர் ஏற்கனவே 10 வருடகாலமாக அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். ஆகவே மூன்றாவது முறையாக இந்த தேர்தலிலும் ஆட்சியை பிடித்து இருக்கிறார்.

அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. அந்த மாநிலத்தில் இருக்கின்ற 294 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் உயிரிழந்ததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கூட்டணி இடதுசாரிகள் கூட்டணி என்று மும்முனை போட்டி நிலவி வந்தது.

சட்டசபை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மம்தா பானர்ஜி 213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறார். ஆட்சியை பிடிப்பதற்கு 148 தொகுதிகள் போதுமான இடங்கள் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார் . மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்பது இது 3-வது முறையாகும் என்று சொல்லப்படுகிறது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் . சக்கர நாற்காலியில் இருந்தபடியே தேர்தலை சந்தித்து வெற்றி அடைந்திருக்கிறார் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி அடைந்தார். இருந்தாலும் அவருக்கு 6 மாத காலம் அவகாசம் இருப்பதன் காரணமாக, முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெறுவார் என சொல்லப்படுகிறது.

Exit mobile version