Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் புழங்கும் பகுதிக்குள் வந்த புலி ஒன்றிடம் மனிதன் ஒருவர் தனியாக மாட்டிக்கொண்டு தப்பித்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஹ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் வனத்தில் இருந்து புலி ஒன்று வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பீதியான மக்கள் கூட்டமாக சேர்ந்து அதை விரட்ட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த புலியும் பதற்றமடைந்து சுற்றிக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்? ஆம் அப்படி ஒரு நபர் அந்த நபரிடம் தனியாக மாட்டிக் கொண்டார். ஆனால் தனது உயிரைக் காக்க அவர் எடுத்த சமயோஜித முடிவு அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது.

புலி அவர் அருகில் வரும் போது அதை எதிர்த்து எதுவும் செய்யாமல் இறந்து போனவர் போல அசையாமல் அப்படியே கிடந்துள்ளார். அவரை வந்து சீண்டிப்பார்த்த புலி அவரையே சுற்றி வந்தது. ஆனால் அந்நபர் தன் உடலில் சிறு அசைவைக் கூட காட்டவில்லை. இந்தக் காட்சியைப் பார்த்த கூட்டமாக இருந்த மக்கள் சத்தங்களை எழுப்பி புலியை பயமுறுத்த ஒரு கட்டத்தில் புலி பயந்து ஓட ஆரம்பித்தது. இதையடுத்து மக்கள் அந்த புலியைத் துரத்தி விரட்டினர்.

புலி வேட்டையாடாமல் இறந்து போனவற்றை தனது உணவாக உண்ணாது என்பதைப் புரிந்து கொண்ட அந்நபர் புத்திசாலித் தனமாக தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். இந்த காட்சிகளைக் கொண்ட பல்வேறு நபர்கள் எடுத்த வீடியோக்கள் சமுக வலைதளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.

Exit mobile version