கணவனை ஜாமீனில் எடுக்க உதவி செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பஹ்வாரா பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் கணவன் சில நாட்களுக்கு முன் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது கணவனை வெளியில் கொண்டு வருவதற்கு தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஸ்வர்பூ சிங் என்பவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண்ணும் ஸ்வர்பூ சிங் கேட்கும்போதெல்லாம் பணம் அளித்துள்ளார். இதுவரை அந்த பெண் 50 ஆயிரம் வரை அவருக்கு பணம் கொடுத்துள்ளார். அதன்பின், அந்த பெண்ணின் கணவனை ஜாமீனில் வெளியில் கொண்டுவர சில என்னென்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய அந்த பெண்ணை அழைத்துள்ளார். அவரின் வீட்டிற்கு சென்ற அந்த பெண் ஆலோசித்து கொண்டிருந்த போது ஸ்வர்பூ சிங் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, மயக்கமடைந்த அந்த பெண்ணை ஸ்வர்பூ சிங் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அதன்பின்னர், அந்த பெண்ணிடம் இது பற்றி கூறிய ஸ்வர்பூ சிங் இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிந்தால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியைடைந்த அந்த பெண் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஸ்வர்பூ சிங் கைது செய்தனர். உதவி கேட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.