ஒரு கைதி மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்!

0
192

ஒரு கைதி மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் சிறையில் வெளிவந்து தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், குல்பர்கா எனும் மாவட்டத்திலுள்ள போஸ்கா எனும் பகுதியைச் சேர்ந்தவர், சுபாஷ் பாட்டீல் என்பவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பின் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றார். தனது நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் நண்பரை அவரது மனைவியோடு சேர்ந்து கொலை செய்ததுதான் அவர் மீதான குற்றம்.

சுபாஷ் 14 ஆண்டுகளாக, சிறையில் இருந்த போது தனது குற்றத்தை நினைத்து வருந்தி அதிலிருந்து மீள முடிவு செய்துள்ளார். மருத்துவப் படிப்பை மேற்கொண்டதால் சிறையில் உள்ள மருத்துவர்களுக்கு அவர் மருத்துவ உதவிகளை செய்துள்ளார். அப்போது அவருக்கு வெளியில் சென்று மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற யோசனை உதித்துள்ளது. இதனையடுத்து நன்னடத்தைக் காரணமாக 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஒவ்வொரு துறவிக்கும் கடந்தகாலம் ஒன்று உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு’ எனக் கூறினார். மேலும் ’ ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகத் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பேன்’ எனக் கூறி இருந்தார்.

ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளிக்க 2019 ஆம் படிப்பை முடித்தார். அதன் பிறகு ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்தார். தற்போது அந்த பயிற்சியையும் முடித்து மருத்துவர் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

’சிறையிலிருந்து வெளியேறிய பின் மீண்டும் நல்ல வாழ்க்கையை தொடர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன’ என கூறியுள்ளார் முன்னாள் கைதியும் இன்னாள் மருத்துவருமான சுபாஷ்.