Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருப்பதாக நம்பமுடியாத தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா போன்ற அதிக வெப்பநிலை இருக்கும் நாடுகளில் அதிகபட்சம் 2 நாட்கள் குளிக்காமல் இருப்பதே கடினமானது. ஆனால் பிஹாரில் வசிக்கும் தரம்தேவ் என்ற நபர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வருகிறார் தர்மதேவ்.

இது சம்மந்தமாக அவர் தெரிவித்துள்ளதில் “1987 ஆம் ஆண்டில், நில மோதல்கள், விலங்கு வதைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை உணர்ந்தேன். அன்றிலிருந்து நான் குளிக்க வேண்டாம் என்று தீர்மானித்தேன். இந்த நேரத்தில், நான் ஒரு குருவிடம் 6 மாதங்கள் கூடவே இருந்து தீட்சை பெற்றேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

அப்போது இருந்து இப்போது வரை அவர் குளிப்பதே இல்லை. இடையில் அவருடைய மனைவி இறந்தபோதும் இறுதிக் காரியங்களை செய்வதற்காகக் கூட தரம்தேவ் குளிக்கவில்லையாம். அதுபோல அவரின் மகன்கள் இறந்தபோதும் குளிக்கவில்லையாம் தற்போது 62 வயதாகும் தர்மதேவ்.

மேலும் இது சம்மந்தமாக அவர் “பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில மோதல்கள், விலங்குகள் வதை ஆகியவை நிறுத்தப்படும் வரை குளிக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறியுள்ளார்.

Exit mobile version