Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கையின் ஆபாச வீடியோ: மனைவியின் அதிரடி முடிவு

Representative image

சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டை, மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சேகர் (30). இவர் பாரிசில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலராக பணியில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 2 வயதில் மகன் உள்ளார்.

சேகர், ஆபாச வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் கொண்டவராக தெரிகிறது. இதற்கும் மேலாக அக்கம் பக்கத்துக வீட்டு பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்து இருக்கிறார். அந்த பெண்கள் குளிக்கும் போது, உடை மாற்றும் போது ஒளிந்திருந்து வீடியோ எடுத்து அதை ரசித்து பார்க்கும் வழக்கத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன், எதிர் வீட்டு பெண் ஒருவர் உடை மாற்றுவதை, மறைந்திருந்த சேகர், தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதை உணர்ந்த அந்த பெண் அதிர்ச்சியடைந்து சத்தமிட்டதும் அவர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அந்த பெண் சேகரின் வீட்டிற்க்கே வந்து சேகரை அடித்து வீடியோவை அழிக்குமாறு கூறியுள்ளார். அப்போது சேகரின் மனைவி அவரது போனை வாங்கி பார்த்த போது அந்த வீடியோ இல்லாததால் அந்த சமாதான படுத்தி அனுப்பி உள்ளார்.

சேகரின் மனைவி , கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகரின் செல்போனை சோதித்து பார்த்தபோது, அதில் எதிர்வீட்டு பெண் உடை மாற்றும் வீடியோ, தனது சகோதரி உடை மாற்றும் காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைப்பற்றி சேகரிடம் கேட்டபோது, அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமான மனைவி, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது சேகரின் மீது புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி பெண்கள் வன்கொடுமை, மானபங்கப்படுத்துவது மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்தார். மேலும், அவரது செல்போனில் இருந்த வீடியோக்களையும் நீக்கி, சேகரை சிறையிலடைத்தனர்.

Exit mobile version