Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

கிருஷ்ணகிரி அருகே தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அங்குள்ள காமராஜ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், இந்த ஆண்டு தலைப் பொங்கலை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு வெளியே சென்ற இவரை நீண்டநேரம் ஆகியும் காணாததால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பதற்றத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்.

ஒருநாள் முழுக்க தேடியும் கிடைக்காத இவர் மறுநாள் காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இறந்த நிலையில் கிடந்த அவரின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்தது. அதை வைத்து யாரோ பாறாங்கல்லை அவர் மேல் போட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தெரிந்தது.

இதையடுத்து போலிஸாருக்குத் தகவல் சொல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில் அவரைக் கொலை செய்தது மாரிமுத்து வசிக்கும் தெருவில் வசிக்கும் ராணுவ வீரரான தீர்த்த செல்வன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீர்த்த செல்வன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவிக்கும் மாரிமுத்துவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதைக் கண்டுபிடித்த தீபச்செல்வன் கள்ளக்காதலை நிறுத்துமாறு மாரிமுத்துவை எச்சரித்துள்ளார். ஆனாலுமவர் பேச்சைக் கேட்காத மாரிமுத்துவை தீர்த்த செல்வன் தனது நண்பர்களுடன் அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து தீபச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version