Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!!

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!!

கல்லூரி மாணவி ஒருவரிடம் இருந்து செல்போனை திருடிய இளைஞர் அந்த போனில் சேமிக்கப்பட்டிருந்த பெண்களின் எண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் பெண்கள் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல் மற்றும் தாக்குதல் நடத்த வண்ணம் உள்ளது. அதற்கு செல்போன் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளும் உதவியாக உள்ளன. தான் எந்த ஒரு தவறும் செய்ய விட்டாலும் பெண்கள் ஆண்களால் தொடர்ந்து இதுபோல் பாதிப்புக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.

இளம்பெண் ஒருவருக்கு அவரது மொபைலில் இல்லாத நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியான அந்தப் பெண் சம்பந்தப்பட்ட நம்பருக்கு போன் செய்து திட்டியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய பெண் குரல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்து சம்பந்தப்பட்ட மெசேஜ்களை காட்டியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நம்பரின் மொபைல் சிக்னலை டிராக் செய்த திருப்பத்தூர் காவல் நிலையத்தினர், அந்த எண் தற்போது சென்னையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அதையடுத்து தொடர்ந்து அந்த நம்பரை கண்காணிக்க தென்காசியைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்துள்ளனர். வினோத்தை கைது செய்து விசாரித்ததில் கல்லூரி மாணவி ஒருவரின் செல்போன் திருடிய அவர், அந்த மொபைலில் இருந்த பெண்களின் எண்ணிற்கு இதுபோல் ஆபாசமான மெசேஜ் அனுப்பியது தெரிந்துள்ளது. இதுபோல் அவர் மொத்தமாக 30க்கும் மேற்பட்ட பெண்களின் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

Exit mobile version