Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபாச தொடுகைகள் முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை வரை தினமும் ஏதேனும் ஒரு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அப்படி இருக்கையில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த அந்த நபருக்கு திருமணமாகி மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை வேலை முடிந்த பின் அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 20 வயது மதிக்கதக்க நான்கு பெண்கள் அவர் மீது ஸ்பிரே அடித்து கடத்தி சென்றுள்ளனர்.

அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்கு அழைத்து சென்ற அவர்கள் அவரை பாலியல் தொல்லை அளித்தாகவும் தெரிவித்துள்ளார். மது அருந்திய அந்த பெண்கள் தன்னையும் மது அருந்த செய்ததோடு அதிகாலையில் மீண்டும் கண்ணை கட்டி அந்த காட்டில் விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புகார் அளிக்க விரும்பிய நிலையில், பயந்து போன அவரின் மனைவி வேண்டாம் என கூறியதால் அவர் புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒரு ஆணை பெண்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version