இணையத்தில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்! அதிர்ச்சியில் கணவர்! நடந்தது என்ன?

Photo of author

By Anand

இணையத்தில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்! அதிர்ச்சியில் கணவர்! நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நபர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.சமீபத்தில் திருமணமான அந்த வாலிபர் மனைவியை இங்கேயே விட்டுவிட்டு வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. அதை அந்த வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த படங்களில் சமீபத்தில் திருமணமான அவரது மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அவரது மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சிகளும் காணப்பட்டன.

இவ்வாறு மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன அந்த வாலிபர் இது பற்றி தன்னுடைய மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், படுக்கை அறை காட்சிகளை யாரோ ரகசியமாக படம் எடுத்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் இதைப்பற்றி அந்த வாலிபர், வெளிநாட்டில் இருந்தபடியே கேரள மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருக்கிறார். எப்படியாவது மனைவியின் ஆபாச படங்களை வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும், அதனை ரகசியமாக படம் பிடித்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார்.

கேரள மாநில சைபர் கிரைம் போலீசார் நடந்த இந்த சம்பவம் பற்றி தீவிரமாக விசாரித்தனர். முதலில் அந்த பெண்ணின் படங்கள் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆராய்ந்தனர். இதில், படங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட இந்த வாலிபரின் வீட்டில் இருந்தே பரவி இருப்பது தெரிய வந்ததுள்ளது.

இதனையடுத்து கேரளா மாநில சைபர் கிரைம் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதில் அங்கு பெண்ணின் படுக்கை அறையில் ஸ்மார்ட் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் டி.வி.யில் இருந்து தினமும் கணவருடன் ஸ்கைப்பில் சேட்டிங் செய்வேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியதையடுத்து சந்தேகம் கொண்ட சைபர் கிரைம் வல்லுனர்கள் ஸ்மார்ட் டி.வி.யை பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் கேமிரா எப்போதுமே ஆன்லைனில் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த பெண் இரவு நேரத்தில் கணவருடன் ஸ்கைப்பில் பேசிய பின்பு ஸ்மார்ட் டி.வி.யின் கேமிராவை ஆப் செய்யாமல் அப்படியே விட்டிருக்கிறார். அது தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. இதை அறியாமல் ஸ்மார்ட் டி.வி. முன்பே அந்த பெண் உடை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவர் உடை மாற்றும் இந்த காட்சிகள் ஸ்மார்ட் டி.வி. கேமிராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவரின் கம்ப்யூட்டரில் அப்லோட் ஆகி உள்ளது. இந்த காட்சிகளை தான் அவரது கணவர் பார்த்து விட்டு அலறி உள்ளார்.

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் இதனை கண்டு பிடித்து அந்த பெண்ணிடம் நடந்த தவறை விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைத்துள்ளனர். மேலும் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொருவரின் விரல் நுனியிலும் உலகம் வந்து விட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் நுணுக்கம் தெரியாவிட்டால் இது போன்ற தவறுகள் நடக்கத் தான் செய்யும். வங்கிகளிலும் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக நடக்கிறது. டிஜிட்டல் சேவையை சரியாக தெரிந்து கொள்ளாவிட்டால் பண இழப்பு ஏற்படும். இதற்கு நாம் தான் நம்முடைய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


Exit mobile version