திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

0
124

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் விலைக்கு வாங்கியுள்ளார். புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே மாற்றிய அவர் தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனே போலிஸிடம் தகவல் சொல்ல அங்கு விரைந்துள்ளனர் போலீஸார். போலீஸார் வரும் வரையும் அவர் தூங்கிக் கொண்டே இருந்துள்ளார்.

போலிஸார் அவரைத் தட்டி எழுப்பியதும் அதிர்ச்சியுடன்  முழித்துள்ளார். அவரைக் கைது செய்த போலிஸார் விசாரணையை மேற்கொள்ள தனது கதையை சொல்லியுள்ளார். , மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த அவரது பெயர் சஞ்ஜீவ். திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கைக்குக் கிடைத்த பொருட்களைத் திருடிய அவர் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக மதுவகைகளைப் பார்த்து சபலப்பட்டுள்ளார். அவைகளை குடித்த அவர் அப்படியே போதையாகி அங்கேயே தூங்கியுள்ளார்.