Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் ! தொலைக்காட்சி நேரலையில் கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் !

ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் ! தொலைக்காட்சி வந்து கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் !

சண்டிகாரில் கடந்த மாதம் நடந்த கொலை ஒன்றின் குற்றவாளி தொலைக்காட்சி அரங்கத்துக்கு வந்து தான் செய்த கொலையை ஒத்துக்கொண்டுள்ளார்.

சண்டிகார் மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் சப்ரஜித் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்துப் போலிஸார் கொலையாளியைத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சண்டிகார் நியுஸ் 18 தொலைக்காட்சிக்கு அரங்கத்துக்கு வந்த மனேந்தர் சிங் என்பவர் சப்ரஜித்தைக் கொலை செய்ததை நேரலையில் ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்துப் போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட சப்ரஜித் மனிந்தரோடு சம்மந்தப்பட்ட ஹோட்டலில் டிசம்பர் 30 ஆம் தேதி செக் இன் செய்துள்ளார்.

அதன் பின்னர் அடுத்த நாள் ஹோட்டல் ஊழியர்கள் பல முறைக் கதவைத் தட்டியும் திறக்காததால் வேறொரு சாவியை போட்டுத் திறந்துள்ளனர். அப்போது அந்த பெண் மட்டுமே கழுத்தறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சப்ரஜித் மற்றும் மனிந்தருக்கு இடையிலான காதல் விவகாரத்தில் இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளில் மனிந்தர் 2010 ஆம் ஆண்டு இதே போல ஒரு கொலை வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version