Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் !

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் !

சென்னையில் உள்ள பல பெண்கள் விடுதிகளில் நுழைந்து நூதனமான மொபைல் போன்களைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் பல இடங்களில் உள்ள பெண்கள் விடுதிகளில் நுழைந்த இளைஞர் ஒருவர் நூதனமாக மொபைல் போன்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் சரியாக காலை 7 மணிக்கு வரும் அந்த இளைஞர் வைஃபை இந்த பிரச்சினை இருப்பதாக கூறி அதை சரிசெய்ய வந்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை நம்பிய பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் மொபைல் போன்களை சார்ஜ் போட சொல்லியுள்ளார்.

அதை நம்பி  பெண்கள் ஒரு இடத்தில் சார்ஜ் போட அசரும் நேரம் பார்த்து அங்கிருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.  இதனையடுத்து பெண்கள் போலிஸில் புகார் கொடுக்க போலிஸார் விசாரணையில் இறங்க இதுபோல பலவிடுதிகளில் இதுவரை 34 பெண்களின் செல்போன்களை திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலிஸார் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ய அவர் ஹெல்மெட்டை கழட்டாமல் இருந்ததால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து அருகில் உள்ள பகுதியில் சிசிடிவி கேமரா கேமராக்களை சோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர். தண்டையார்பேட்டை வ உ சி நகரை சேர்ந்த பாலாஜி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவரை கைது செய்த போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version