Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

துக்ளக் விழாவில் ரஜினி பெரியாரின் சேலம் மாநாடு குறித்துப் பேசிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கேட்காவிட்டால் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனால் இன்று தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி ‘நான் கற்பனையாக எதையும் பேசவில்லை. இந்து குழுமத்தின் ப்ரண்ட்லைன் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியினை வைத்துதான் பேசினேன். நான் கேட்டவற்றை மற்றவர்கள் சொன்னதை வைத்துதான் பேசினேன். அதனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமுடியாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேச்சில் ‘பிரண்ட்லைன் இந்து குழுமத்தைச் சேர்ந்தது என்பது தகவல் பிழை என்றும் ரஜினி சுட்டுக்காட்டிய கட்டுரை 2017 ஆம் ஆண்டு வெளியானது. ஆகவே 1971 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி அப்போது வெளியான நாளிதழ்களில் இருந்து ஆதாரம் காட்டாமல் 2017 ல் வெளியான கட்டுரையை ஆதாரம் காட்ட்வேண்டியது ஏன் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப் பட்டன.

இந்நிலையில் ரஜினிக்கு எதிராகப் போராட்டம் சில இடங்களில் நடந்து வருகிறது. ரஜினி வீட்டின் முன் நேற்று கூடிய சிலர் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் ‘ரஜினி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது. அவரது கையை வெட்டுவோம்.’ எனக் கூறியது சம்மந்தமான வீடியோ வெளியானது. அந்த நபர் பேசியது குறித்து போலிஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என ரஜினி ரசிகர்கள் சார்பில் புகார் எழுந்துள்ளது. மேலும் ஒரு சிலர் சம்மந்தப்பட்ட அந்நபர் பெரியாரிஸ்ட் எனவும், இதுதான் பெரியார் சொல்லிக் கொடுத்த அரசியல் நாகரிகமாக எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version