Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மணக்குள விநாயகரின் சிறப்பம்சங்கள்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு அருகிலுள்ள திருக்குளத்தில் ஒருகாலத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதிலிருந்து சுவையான நீரினால் தான் விநாயகரின் திருமஞ்சனம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த குளம் மணலால் ஆனது என்று சொல்லப்படுகிறது.

ஆகவேதான் அந்தக் குளம் மணல் குளம் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மணக்குளம் ஆனது. ஆகவே விநாயகரும் மணக்குள விநாயகரானார். தற்போது இந்த குளத்தில் நீர் இல்லை ஆனாலும் பெயரினால் அந்த குளத்தின் பெருமை இன்று வரையில் அழியாமல் இருக்கிறது.

இந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்று பெயரும் இருக்கிறது புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது விநாயகரின் அருமை தெரியாமல் ஆங்கிலேயர்கள் அவரை கடலில் கொண்டுபோய் போட்டு விட்டனர்.

என்ன ஒரு அதிசயம்? சில தினங்களில் அந்த சிலை போட்ட இடத்திலேயே மிதந்தது. இதனைக் கண்டு அந்த பகுதி மக்கள் அந்தக் கடற்கரையில் ஆலயம் அமைத்து விநாயகரை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து விநாயகர் சிறப்பை உணர்த்துக் கொண்ட வெள்ளைக்காரர்களும் அவரை வழிபட தொடங்கினர். அன்றிலிருந்து அவர் வெள்ளைக்கார பிள்ளையாராகிவிட்டார்.

இந்த விநாயகரை வணங்கினால் மனதில் அமைதி ஏற்படும், விட்டுப்போன உறவுகள் தேடிவரும், காரியத்தடைகள் மற்றும் தாமதங்கள் விலகி வாழ்வில் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள்.

Exit mobile version