Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காரில் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு கட்டாயம் சீட் பெல்ட்! மத்திய அரசின் புதிய நடவடிக்கை!

Mandatory seat belt for those in the back seat of the car! The central government's new action!

Mandatory seat belt for those in the back seat of the car! The central government's new action!

காரில் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு கட்டாயம் சீட் பெல்ட்! மத்திய அரசின் புதிய நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை கூறியுள்ளது. சமீபகாலமாக விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது. இதனை முடிந்த அளவு கட்டுப்படுத்த மத்திய அரசு பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வரை கார் ஓட்டுபவர்களுக்கும் முன் இருக்கையில் இருப்பவர்கள்  மட்டுமே சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற  விதிமுறை உள்ளது.

தற்பொழுது பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியுள்ளனர். அந்த வகையில் கார் நிறுவனங்களுக்கு இனி பின் இருக்கையில் அமர்பவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற நோக்கில் எச்சரிக்கை சமிக்ஞை ஆக இருக்க வேண்டும் என்று கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இனி வரும் காலங்களில் பின் இருக்கையில் இருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

Exit mobile version