Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதன் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ரிலீஸ் வேலைகள் தற்போது நடந்துவரும் நிலையில் இயக்குனர் மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியான நிலையில் தற்போது மருத்துவர்கள் அறிவுரையோடு வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version