Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

#image_title

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

லட்சக் கணக்காண திமுக தொண்டர்கள் பங்கேற்றதாக கூறப்படும் இந்த மாநாட்டில்… பல அலப்பறைகள் நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கின்றது.

மாநாட்டை சிறப்பாக நடத்த திமுக பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் மெய்ன் பாயிண்ட்டில் கோட்டை விட்டதாக மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்களே குமுறி விட்டனர்.

மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வகை வகையான உணவு, லெக் பீஸுடன் பிரியாணி… வழங்கப்படும் என்று விளம்பரப் படுத்திய திமுகவை நம்பிய தொண்டர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் மும்முரமாக.. மத்திய அரசை விமர்சித்து பேசி கொண்டிருக்கும் பொழுது அதையெல்லாம் கவனிக்காமல்… வந்த தொண்டர்கள் பிரியாணி வழங்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணியை பார்த்தவர்களுக்கு ஒரே ஷாக்… காரணம் அது பிரியாணி இல்லை குஸ்கா..

இதனால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் வாங்கிய சாப்பாட்டை மாநாட்டு பந்தலில் வீசி விட்டனர். பாதி பேர் பிரியாணி என்று நம்பி ஏமாந்த நிலையில் பாதி பேருக்கு சாப்பாடே கிடைக்கவில்லையாம்..

கொடுத்த சூப்பில் உப்பு ஜாஸ்தி… காய்கறி நறுக்கிய படி இருக்கு.. அரிசி உறவைக்கப்ட்டு இருக்கு.. ஆனால் சாப்பாடு மட்டும் தயார் செய்ய யாரும் இல்லை.. மாநாட்டிற்கு வந்து பட்டினியாக தான் வீடு திரும்புகிறோம்.. என்று திமுக தொண்டர்கள் குமுறி விட்டனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் உதயநிதி அவர்கள் சீரியஸாக உரையாற்றி கொண்டிருக்கும் போது மாநாட்டில் அமர்ந்திருந்த தொண்டர்கள் ரவுண்டு கட்டி சீட்டாட்டம் ஆடி கொண்டிருந்தது தான்.

தொண்டர்களுக்கு முறையான உணவு வழங்கப்படாமல் பட்டினி போட்டது… பிரியாணி என்று சொல்லி குஸ்கவை வழங்கியது.. இதை பார்க்கும் பொழுது திமுக வெத்து விளம்பரத்திற்கு பேர் போனது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறது என்று திமுவை… நெட்டிசன்கள் வார்த்தைகளால் வறுத்து எடுத்து வருகின்றனர்.

Exit mobile version